• Apr 18 2026

ஞானபீட வெற்றியை பேரக்குழந்தைகளுடன் கொண்டாடிய வைரமுத்து – புகைப்படம் வைரல்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான குரலாகத் திகழும் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழ் சமூகத்தின்  பெருமையாக கருதப்படுகிறது.

பல தசாப்தங்களாக தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


2025-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, திரையுலகில் இருக்கும் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக பாராட்டுகளை தெரிவித்து, அவரது சாதனையை கொண்டாடி வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து, தனது கவிதைகள் மற்றும் பாடல்களின் மூலம் தமிழ் மொழியை உலகளவில் பரப்பியவர். ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்களையும், பல நூல்களையும் எழுதியுள்ள அவர், தனது படைப்புகளில் சமூக உணர்வுகளையும் மனிதநேயத்தையும் பிரதிபலித்துள்ளார். இந்த அடையாளமே அவரை இலக்கிய உலகில் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை மேலும் சிறப்பிக்க, வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், தனது பேரன் மற்றும் பேத்திகளுடன் இருக்கும் அவர், குடும்பத்துடன் இந்த வெற்றியை கொண்டாடும் தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் “பேரன் பேத்தியின் ஞானபீடக் கொண்டாட்டம்” என்று குறிப்பிட்டிருந்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


Advertisement

Advertisement