• Apr 18 2026

நான் நாயுடு பையனா.? சாதி பற்றி பேசி சிக்கலில் சிக்கிய பார்த்திபன்.! கிளம்பிய பூகம்பம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்பவர் பார்த்திபன்.  இவர் சமீபத்தில் நடிகை திரிஷா பற்றி தெரிவித்த கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுதுவதற்கு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், தெலுங்கு படமான 'உஸ்தாத் பகத் சிங்'  படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் தனது சாதியை பற்றி பேசியுள்ள இந்த விடயம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், முதலில் என்னைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம் என்று நான் பார்த்திபன் ராதா கிருஷ்ணன். நான் ஒரு நாயுடு பையன். ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு தெரியாது. தமிழ் தான் எனக்கு இயல்பாக வரும் மொழி. 


எனினும் அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் நான் முழுமையாக தெலுங்கில் பேசுவேன். மூர்த்தி தான் என்னுடைய உண்மையான பெயர் என்று தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் இவ்வாறு தெரிவித்தது சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது. மேலும் அவர் தமிழர்களை பற்றி மரியாதை குறைவாக பேசி உள்ளதாகவும் தற்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.


Advertisement

Advertisement