விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் பங்கு பற்றினர். அதில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் ரம்யா ஜோ. இவர் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல் பாடல்கள் நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
தன்னுடைய இமேஜை மாற்றுவதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக மிகவும் உருக்கமாக தெரிவித்து இருந்தார். பிக் பாஸ் ஆரம்பத்தில் சண்டைக்கோழி ஆக இருந்தவர், போகப் போக சக போட்டியாளர்களுடன் அன்புக்கு அடிமையாக மாறினார்.
எனினும் பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாள் எப்படி ரம்யா ஜோ தங்கினார் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே காணப்படுகிறது. இவர் எலிமினேட் ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் முதன்முறையாக வீட்டுத்தலை ஆனார். ஆனாலும் அவருடைய கேப்டன்சி சொதப்பலாகவே காணப்பட்டது .

இதைத்தொடர்ந்து கடந்த வார இடம்பெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறினர். இதன்போது ரம்யா ஜோவுக்கு 4.5 லட்சம் பிக்பாஸ் வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையோடு, தன்னுடைய ஆடல் பாடல் வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார் ரம்யா ஜோ. சமீபத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ரம்யா ஜோ கலந்து கொண்டு ஆடிப்பாடி உள்ளார். அவருடைய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
இதை பார்த்த ரசிகர்கள் தன்னுடைய இமேஜை மாற்றுவதற்காக தான் பிக் பாஸ் வந்தார் என்றும், இனிமேல் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறிய ரம்யா ஜோ, இப்படி பண்ணுவது சரி இல்லை என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!