• Dec 27 2024

தங்கமயிலின் கவரிங் நகைகளுக்கு வைக்கப்பட்ட செக்.. சரவணன் சொன்ன முடிவு! புதிய திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் தங்கமயிலின் அம்மா, தங்க மயிலுக்கு போன் பண்ணி நகையெல்லாம் போட்டுக் கொண்டு மறுவீட்டுக்கு வருமாறு கூறுகிறார்.

இதை தொடர்ந்து தங்க மயிலும் சரவணனும் மறு வீட்டுக்கு செல்கின்றார்கள். அங்கு தங்கமயிலின் அம்மா தங்க மயிலை பார்த்தவுடன் அவ்வளவு சொல்லியும் ஏன் நகையை போட்டு வர இல்லை என்று கேட்க, சரவணனின் சகோதரி மறு வீட்டுக்கு தானே போறா? இவ்வளவு நகை எதுக்கு என கழட்டி வைத்து செல்ல சொன்னதாக சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து சரவணன், தங்கமயில் வீட்டில் இருக்க, அங்கு  கடன் கொடுத்தவர்கள் வந்து தங்க மயிலின் அப்பாவிடம் வாங்கிய  பணத்தை கொடுக்குமாறு சத்தம் போடுகிறார்கள்.


இதை அடுத்து உள்ள இருந்த சரவணன் என்ன பிரச்சனை என்று கேட்க, கல்யாணத்திற்கு கடன் வாங்கியதாகவும் அதை கேட்டு வந்துள்ளதாகவும் சொல்ல, தங்கமயிலின் நகைகள் எல்லாம் சும்மா தான் இருக்குது அதை வச்சு பணத்தை கொடுங்க என்று சொல்லுகிறார்.

இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. ஞாயிற்றுக்கிழமை இந்த சீரியல் இரண்டு மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளதால் அடுத்தடுத்து என்ன திருப்பங்கள் நடைபெற உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement