• Dec 27 2024

பிரபல சீரியல் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை மாலாபிகா தாஸ் என்பவர் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த நிலையில் அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவருக்கு வயது 31.

மும்பையில்  நடிகை மாலாபிகா தாஸ் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடனே வந்த காவல்துறையினர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  நடிகை மாலாபிகா தாஸ் உடல் சிதைந்த நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

 நடிகை மாலாபிகா தாஸ் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்த நிலையில் திடீரென அவர் ஜூன் 4ஆம் தேதியே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தற்கொலை குறித்து கடிதம் எழுதும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி டிரையல்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில்  நடிகை மாலாபிகா தாஸ் இடம் பிடித்தார் என்பதும், இந்த சீரியலில் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement