• Dec 28 2024

சிம்பு நடிக்க கூடாது.. புதிய சர்ச்சையில் சிக்கிய லிட்டில் ஸ்டார்! மீண்டும் தலை நிமிர்வாரா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு தற்போது உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் சிம்பு நடிக்கின்றார் என்பதை உறுதி செய்யும் வகையில் சிம்புவின் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், கொரோனா குமார் படத்தில் நடித்த சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. தற்போது அவர் எப்படி தக் லைஃப் படத்தில் நடிக்கலாம்? அவர் நடிக்க கூடாது என ஐசரி கணேஷ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த கொரோனா குமார் படத்தில் நடிப்பதற்கு  சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


அதற்காக அவருக்கு 9.5 கோடி ரூபா சம்பளம் பேசப்பட்டு 4.5 கோடி ரூபா முற்பணமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் பணத்தை முற்பணமாக பெற்றதோடு படத்தில் நடிக்க முன்வரவில்லை. ஆனால் ஏனைய படத்தில் நடித்து வருகின்றார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.


எனினும், சிம்புவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஒரு கோடி ரூபாய் மட்டுமே முற்பணமாக சிம்பு பெற்றதாகவும், அந்தப் பணத்தை குறித்த நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுபோலவே அந்த பணம் டெபாசிட்  செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இவ்வாறான நிலையில் தற்போது மீண்டும் ஐசரி கணேஷ் சிம்பு நடிக்க கூடாது. அவருக்கு தடை விதிக்க வேண்டும் என பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தற்போது இந்த விடயம் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement