சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 12 ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை தான். அதுமாதிரி, இந்த ஆண்டு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழவிருக்கிறது. தமிழ் சினிமாவின் கிளாசிக் படமான படையப்பா மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. 1999-ல் வெளிவந்து திரையுலகை அசத்திய இந்த படம், இன்றைக்கும் ரசிகர்களால் பார்க்கப்படும் evergreen entertainer ஆகும்.

இந்நிலையில், படையப்பாவைச் சுற்றி ஒரு முக்கியமான தகவலை ரஜினிகாந்த் தானே பகிர்ந்து கொண்டுள்ளார். இது ரசிகர்களின் பரவசத்தை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
ரஜினிகாந்த் பேசிய இந்த புதிய தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. அவர் கூறியதாவது, “படையப்பா படத்தின் 2ம் பாகம் எடுக்கலாம்னு எனக்கு தோணுச்சு... ‘அடுத்த ஜென்மத்திலாவது உன்னை பழிவாங்காமல் விட மாட்டேன்’ என நீலாம்பரி சொல்லி இருப்பார். அதனால் அதை வைத்து ‘நீலாம்பரி – படையப்பா 2’ என படம் எடுக்க தற்போது கதை விவாதம் நடக்குது. நல்லா வந்துச்சுனா ரசிகர்களுக்கு திருவிழா இருக்கும்.”

ரஜினியின் இந்த ஒரு வாக்கியம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல், தொழில்துறையிலுள்ள பலரும் இது நிச்சயமாக ஒரு record-breaking sequel ஆகும் எனத்தெரிவித்து வருகின்றனர்.
Listen News!