• Dec 27 2024

மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் திடீர் பதற்றம்! நுழைந்தது தெய்விக சக்தியா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

1979 ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையில் ஆரம்பித்தவர் தான் விஜயகாந்த் . அதன்பின் சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் இவரது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார் விஜயகாந்த். தொடர்ந்து புலன் விசாரணை, சத்ரியன், கேப்டன் பிரபாகரன், வானத்தைப்போல, தவசி, சேதுபதி ஐபிஎஸ், ரமணா என இதுவரை கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவரது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்த நடிகர் விஜயகாந்த் தானாம். இதை வேற யாரும் செய்திருக்க மாட்டார்கள்.

கிராமங்களில் இவரது படங்கள் ரிலீசாகும் போது அந்த தினம் திருவிழா போல கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வண்டி கட்டிக்கொண்டு படம் பார்க்க செல்வார்களாம்.  


இதைத்தொடர்ந்து அரசியலிலும் சிறப்பான பயணத்தை தொடர்ந்து வந்த விவிஜயகாந்த், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் தற்போது வரையில் இவருடைய நினைவிடத்திற்கு சென்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்றைய தினம் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை பார்த்து அங்கு இருந்தவர்கள் பதட்டத்துடன் அதனை விரட்டமுனைந்துள்ளார்கள். தற்போது குறித்த காணொளி வைரலாகி வருகின்றது.

விஜயகாந்த் உயிரிழந்து அவரது இறுதி ஊர்வலம் சென்ற போது, வானத்தில் கருடங்கள் வட்டமிட்டன. அதுவே தெய்வ அம்சமாக கருதப்பட்டது. தற்போது இதுவும் அப்படி ஒரு தெய்வீக சக்தியாகவே மக்களால் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement