• Dec 27 2024

15 வயதில் தொடங்கி 34 வயது வரை நாட்-அவுட்.. தமன்னாவின் 19 ஆண்டு திரை வாழ்க்கை..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா கடந்த 1982 ஆம் ஆண்டு தனது 15 வயதில் நடிக்க தொடங்கிய நிலையில் தற்போது அவருக்கு 34 வயதாகும் நிலையில் கடந்த 19 ஆண்டுகளாக அவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

பொதுவாக நடிகைகள் 5 அல்லது 10 வருடங்கள் நாயகியாக தாக்குப் பிடிப்பது மிகப்பெரிய விஷயம் என்ற நிலையில் நயன்தாரா, த்ரிஷாவை அடுத்து தமன்னா தனது 19 வருட திரை வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். கடந்த 1982 ஆம் ஆண்டு ஒரு ஹிந்தி படத்தில் அறிமுகமான அவர் அதன் பிறகு தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், மராத்தி, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார் என்பதும் அவரது படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ் திரை உலகை பொருத்தவரை அவர் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி உள்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் அதேபோல் தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஹிந்திலும் அவர் சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் அவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்தது. ஒரு பக்கம் கிளாமராகவும் இன்னொரு பக்கம் செண்டிமெண்ட் நடிப்பிலும் அசத்தும் தமன்னா ஒரு சில படங்களில் ஆக்ஷன் நடிப்பிலும் சிறந்து விளங்கி உள்ளார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான ’நவம்பர் ஸ்டோரி’ என்ற வெப் சீரிஸில் அசத்தலாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

15 வயதில் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்து 19 வருடங்கள் ஆகியும் இன்னும் இளம் நடிகைகளுக்கு இணையாக கைவசம் நான்கு படங்கள் வைத்துள்ளார் என்பதும் நாட் அவுட் ஆகாமல் அவரது ஸ்கோர் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய திரை உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக தமன்னா உள்ளார் என்பதும் நடிப்பு மட்டுமின்றி சில பிசினஸ்களையும் அவர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தமன்னா திரையுலகில் இன்னும் பல படங்களில் நடித்து சாதனைகள் செய்ய வேண்டும் என்பது அவரது ரசிகர்கள் விருப்பமாக உள்ளது. 

Advertisement

Advertisement