• Dec 26 2024

சினிமா நடிச்சதெல்லாம் போதும், இனிமேல் கிரிக்கெட் தான்.. தோனிக்கு போட்டியாக களமிறங்கும் அஜித்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் தல என்று அஜித்தையும், கிரிக்கெட்டில் தல என்று தோனியையும் கூறிவரும் நிலையில் தோனி ஏற்கனவே சினிமாவில் நடித்து விட்டார் என்பதும் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் ஒரு சினிமாவை தயாரித்துவிட்டார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது தல அஜித் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பெரும்பாலும் மகனுடன் தான் நேரத்தை செலவழிப்பார் என்பதும் மகனுடைய பள்ளிக்குச் செல்வது, பள்ளியில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வது, மகனின் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஊக்கமளிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருவார்.

அந்த வகையில் இன்னும் ஒரு சில நாட்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கு அஜித் செல்ல இருக்கும் நிலையில் தற்போது அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் மகன் ஆத்விக் உடன் அவர் தான் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மகன் ஆத்விக் பந்து வீச அஜித் பேட்டிங் செய்யும் இந்த புகைப்படத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்திற்கு தல தோனி போல், தல அஜித்தும் கிரிக்கெட்டில் களமிறங்கி விட்டார் என்றும் இனி தோனியால் கூட அஜித்தை வெல்ல முடியாது என்றும் பில்டப் செய்து கமெண்ட்களை அஜித் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement