இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம், வெளியான நேரத்தில் கடும் சர்ச்சைகளுக்கு உள்ளானாலும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையேயும் பெரிய வெற்றியை பெற்றது. சமூக கருத்துகளை மையமாக வைத்து உருவான அந்த படம், இயக்குநர் மோகன் ஜியை தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்துடன் நிறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள திரைப்படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும், முதல் பாகத்தில் நடித்த நடிகர் ரிச்சர்ட் ரிஷி மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரலாற்று புனைவு கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
திரௌபதி 2 திரைப்படம் நேற்றைய தினம், ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே, படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, படம் எடுத்த விதம், கதையின் ஆழம் மற்றும் வரலாற்று பின்னணி ஆகியவை பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், திரௌபதி 2 படம் குறித்து நடிகர் ரஞ்சித் வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

திரௌபதி 2 குறித்து பேசிய நடிகர் ரஞ்சித், இயக்குநர் மோகன் ஜியின் அணுகுமுறையை பாராட்டியுள்ளார். அதாவது, “வெறும் வசூலுக்காக படம் எடுக்கிற இயக்குநரா இருந்தால், இந்தப் படத்தை வேற மாதிரி எடுத்து இருப்பார். பிரபாஸின் பாகுபலி மாதிரி, நிறைய செயற்கை தனமான காட்சிகள், எதார்த்தமில்லாத கற்பனை காட்சிகளை வைத்து எடுத்து இருக்கலாம். ஆனால், மக்களை ஏமாற்றாமல், 700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வரலாற்று உண்மை சம்பவத்தை, மிக அழகாகவும் நேர்மையாகவும் கொடுத்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
திரௌபதி 2 திரைப்படம், முழுக்க முழுக்க கற்பனை உலகில் பயணிக்கும் வரலாற்று படமாக இல்லாமல், வரலாற்று உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என கூறப்படுகிறது. அதனால் தான் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு நெருக்கமான உணர்வை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!