• Apr 19 2026

பாவனா அரசியலுக்கு வருகிறாரா.? இது உண்மை தானா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளராக நடிகை பாவனா போட்டியிட உள்ளார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி, சில ஊடகங்களிலும் வெளியானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.


இந்த நிலையில், இந்த வதந்திகளுக்கு நடிகை பாவனா தற்போது தெளிவான விளக்கம் அளித்து, அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனது புதிய திரைப்படமான ‘அனோமி’ வெளியீட்டிற்கு முன்னதாக, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாவனா, தன்னை அரசியலுக்கு இழுக்கும் வகையில் வெளியான இந்த செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.

பேட்டியில், கேரள சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடப் போவதாக பரவும் தகவல் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த பாவனா, “நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை. இப்படியொரு செய்தி எப்படி வெளிவந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை. இதில் துளியும் உண்மையில்லை. அந்தச் செய்தியைப் பார்த்தபோது எனக்குச் சிரிப்பு தான் வந்தது.”என்று கூறியுள்ளார்.


பாவனா சிபிஎம் வேட்பாளராக அரசியலில் களமிறங்க உள்ளார் என்ற தகவல், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. சிலர் அதை உண்மை என நம்பி வாழ்த்துக்களையும் பதிவிட்டு வந்தனர். இதனால், இந்த வதந்தி மேலும் தீவிரமடைந்து, செய்தி ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆனால், பாவனாவின் இந்த விளக்கம் மூலம், அந்த செய்தி வதந்தி என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

Advertisement

Advertisement