• Dec 27 2024

இந்தியில் வெளியாகும் சூரரை போற்று,இன்று வெளியாகும் ட்ரைலர் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி அனைவராலும் பாரட்டபட்ட திரைப்படமான சூரரை போற்று திரைப்படம் இந்தியில் சர்ஃபிரா எனும் தலைப்புடன் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாக இருக்கிறது.

SARFIRA 12th July, 2024 – Film Information

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் உருவாகி வரும் இத் திரைப்படத்தில் பரேஷ் ராவல், ராதிகா மதன், சீமா பிஸ்வாஸ் என முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

Viral Bhayani | The new poster for Sarfira is out now! Trailer releasing in  a few hours. Directed by Sudha Kongara, produced by Aruna Bhatia,  Suriya,... | Instagram

அந்த வகையில் சர்ஃபிரா படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என உத்தியோக பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அதனுடன் போனஸாக இன்னொரு தகவலும் வெளியாகி ரசிகர்களை உட்சாகமூட்டியுள்ளது. அதாவது திரைப்படமானது வருகிற ஜூலை 12 ஆம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Advertisement

Advertisement