• Dec 27 2024

வானத்தைப் போல சீரியல் நடிகைக்கு கோலாகலமாக நடந்த திருமணம்! வைரல் போட்டோஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமான சீரியல்  தான் வானத்தைப்போல சீரியல். இந்த சீரியல் சின்ராசு மற்றும் துளசி என்ற அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் நான்காவது இடத்தை பெற்று முன்னிலைக்கு வந்துள்ளது. கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் காணப்பட்ட விஜய் டிவி சீரியல் தற்போது பின்னிலைக்கு சென்றுள்ளது.

வானத்தைப்போல சீரியலின் ஆரம்பத்தில் துளசியாக நடித்தவர் தான் நடிகை ஸ்வேதா. இவர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகின்றார்.


இந்த நிலையில், சின்னத்திரையில் ஜொலித்து வரும் நடிகை ஸ்வேதா அண்மையில் நிச்சயதார்த்த தகவலை வெளியிட்டு இருந்தார். தற்போது அவருக்கும் விராந்த் என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தற்போது தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டா  ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார் ஸ்வேதா. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement