• Apr 19 2026

அவசரமாக துபாய்க்கு கிளம்பிய விஜய்.. ஏன் தெரியுமா? சற்றுமுன் கிடைத்த தகவல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

'கோட்' படத்தில் ரெட்டை வேடத்தில் நடித்து வரும் விஜய், அண்மையில் கேரளாவில் தனது படப்பிடிப்புக்களை விறுவிறுப்பாக முடித்து இருந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் பெரும் பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல இருப்பதாக பட குழுவினர் தெரிவித்து இருந்தனர். 


மேலும் அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் படத்தை வெளியிட  உள்ளதாகவும் படக்குழு கூறி இருந்தது.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் கோட் படப்பிடிப்பிற்காக துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் நடிகர் விஜய் சென்றபோது அங்குள்ள ரசிகர்களின் அன்பை பார்த்து ரொம்பவும் எமோஷனலாகி இருந்தார். தற்போது துபாய் சென்றுள்ள விஜய் அங்கு எடுக்கவுள்ள செல்பியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement