• Apr 23 2026

'மகாராஜா 2' கதையை கேட்க ஆவலுடன் காத்திருக்கும் விஜய் சேதுபதி.. கொடுத்த அப்டேட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யாப், மம்தா மோகன்தாஸ், நட்டி மற்றும் அபிராமி  உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தான் மகாராஜா. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

திரையரங்குகளில் வெளியாகிய இப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததுடன், பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றது. இது விஜய் சேதுபதியின் கேரியரில் உலகளவில் கொண்டாடப்பட்ட முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது.


இந்த நிலையில், “மகாராஜா 2” படம் குறித்து சமீபத்திய பேட்டியில் விஜய் சேதுபதி பேசியுள்ளார். அதில், இயக்குநர் நித்திலன் மகாராஜா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார். ஆனால் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதை இன்னும் கேட்கவில்லை. கதையை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.. என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மணி ரத்தினம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவலையும் விஜய் சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement