• Dec 26 2024

முத்து எடுத்த முடிவால் தடுமாறும் விஜயா.. ஹாலுக்கு துரத்தப்பட்ட மனோஜ் ஜோடி?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா, ரோகினி, மீனா ஆகியோர் ஒரு ரூமில் தூங்க செல்ல, வழக்கம் போல விஜயா மீனாவை தரக்குறைவாக பேசுகிறார். மீனா தரையில் படுத்து கொள்கிறார். 

மறுபக்கம் முத்து, மனோஜ், அண்ணாமலை மூவரும் ஒரு ஒரு ரூமில் படுக்க முத்து அங்கு பாய்விரித்து கீழே படுக்கிறார். மேலும் மனோஜை தூங்க விடாமல் கதை கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதை தொடர்ந்து விஜயாவும் குறட்டை விட்டு ரோகிணியை தூங்க விடாமல் செய்கிறார். இதனால் ரோகிணி எழுந்து ஹாலுக்கு வர அங்கு மனோஜ் இருப்பதை பார்க்கிறார். இறுதியாக நாமும் வந்த இடத்துக்கே வந்துட்டோம் இங்க தான் பாய விரிச்சி படுக்கனும் போல சொல்லி தூங்குகிறார்கள்.

மறுநாள் காலையில் மீனா லேட்டாக எழுந்து வர, மகாராணிக்கு இப்பதான் தூக்கம் போச்சா? எல்லாரும் வேலைக்குப் போக வேண்டும் என்று உனக்கு தெரியாதா? வேலையெல்லாம் யார் பார்க்கிறது என்று சத்தம் போட, மீனா தனக்கு உடம்பு முடியவில்லை என்று சொல்கிறார். 

அந்த நேரத்தில் மனோஜும்  ரோகிணியும் வந்து சாப்பாடு கேட்க, இவ இன்னும் சமைக்க இல்ல என்று சொன்னதும், நைட்ல ஒழுங்கா தூங்க முடியல. இப்போ ஒழுங்கா சாப்பாடும் இல்ல என்றா எப்படி என்று சொல்கின்றார்கள்.  அதன்பின் ரவியும் ஸ்ருதியும் சாப்பிடலாமா என்று கேட்க, மீனா இன்னும் சமைக்கவே இல்லை என்று விஜயா சொல்லுகிறார்.


அண்ணாமலை மீனாவுக்கு உடம்பு முடியல என்று சொல்ல, ஸ்ருதி மீனாவை ரெஸ்ட் எடுக்க சொல்லுகிறார். மேலும் இந்த வீட்டில் மீனா மட்டுமா சமைக்கணும்? ரெண்டு மருமகள்கள் இருக்காங்க அவங்க சமைக்கலாம் தானே என்று அண்ணாமலை சொல்ல, ஸ்ருதி எனக்கு சமைக்க தெரியாது. அதனால்தான் செஃப்ப கல்யாணம் பண்ணினேன் என்று சொல்லுகிறார். அதனால் ரவியின் ரெஸ்டாரண்டில் நான் சாப்பிடுகிறேன் என்று அவர் கிளம்புகிறார். அதேபோல ரோகினியும் எனக்கு மீட்டிங் இருக்கு என்று சொல்லி கிளம்புகிறார்.

இவ்வாறு எல்லாரும் வெளியே கிளம்பி போவதை பார்த்த விஜயா, இப்போ உனக்கு சந்தோசமா அவங்க வெளில சாப்பிட போறாங்க என கோபப்பட்டு பேச, அதனை பார்த்த முத்து,  மீனா இனி யாருக்காகவும் சமைக்க மாட்டா. உனக்காக மட்டும் தான் சமைப்பா என்று அண்ணாமலையிடம் சொல்லுகிறார். மத்தவங்களுக்கு தேவையானது அவங்களே சமைச்சிக்க சொல்லு என்று சொல்ல விஜயா ஷாக் ஆகிறார்.

இதை அடுத்து மீனாவுக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கின்றது என்று முத்து அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement