• Dec 27 2024

பிரஷாந்தின் சாணக்கிய தந்திரம் ஜெயிக்குமா? மீண்டும் ரிலீஸ் தேதியில் மாற்றம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக காணப்படும் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அந்தகன். இந்த படம் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரஷாந்துடன் சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், வனிதா, கார்த்திக் என பலர் நடித்துள்ளார்கள். இதன் காரணத்தினாலேயே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில், இறுதியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இதை தொடர்ந்து இந்த படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்றையும் இளைய தளபதி விஜய் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் குறித்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது

இந்த நிலையில், அந்தகன் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அந்தத்  தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆகஸ்ட் ஒன்பதாம் திகதி திரையரங்குகளில் அந்தகன் படம் வெளியாக உள்ளது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement