பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி சரவணனைப் பார்த்து மயில் விஷயத்தில என்ன முடிவெடுத்திருக்கிற என்று கேட்கிறார். அதுக்கு சரவணன் இதில புதுசா முடிவெடுக்கிறதுக்கு ஒன்னும் இல்ல என்கிறார். பின் கோமதி நல்லவளோ கேட்டவளோ அவள் இப்ப உன்ர பிள்ளைக்கு அம்மாவாகப் போகிறாள் அதுதான் நீ என்ன முடிவெடுக்கப் போகிற என்று கேட்டனான் என்று சொல்லுறார்.
அதுக்கு சரவணன் என்ர முடிவை மாற்றவேண்டாம் என்கிறார். அதனை அடுத்து கோமதி சரவணனைப் பார்த்து அவளுக்கு குழந்தை பிறந்தா பிறகு அந்தக் குழந்தை யார் கூட இருக்கும் என்று கேட்கிறார்.மேலும், அப்பா தனியா அம்மா தனியா இருந்தால் அந்தப் பிள்ளை பாசத்துக்கு ஏங்கிப் போகாதா என்று கேட்கிறார். அதைக் கேட்ட சரவணன் என்ர குழந்தையை எல்லாம் நான் அப்படி விட்டிட மாட்டேன் என்கிறார்.

ஆனாலும், என்னால அவளோட சேர்ந்து எல்லாம் வாழமுடியாது என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து நான் நிம்மதியா தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? என்று கேட்கிறார். மேலும், நான் நிம்மதியா இருக்கணும் என்றால் அவள் என்ர வாழ்க்கையை விட்டு போகத் தான் வேணும் என்கிறார் சரவணன். அதைக் கேட்ட கோமதி அழுது கொண்டிருக்கிறார்.
அதனை அடுத்து கோமதி மயில் கிட்ட போய் எப்படி இருக்கிற என்று சொல்லி விசாரிச்சுக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் பாக்கியம் சரவணனைப் பார்த்து என்ர பொண்ணு கர்ப்பமாக இருக்கிற விஷயத்தை சொல்ல வந்தப்போ நீ என்னவெல்லாம் கதைச்ச என்று கேட்கிறார். அதைக் கேட்ட சரவணன் என்னுடைய பிள்ளையை நான் பார்த்துப்பேன் ஆனா, உங்க பிள்ளையோட மட்டும் வாழ மாட்டேன் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!