• Apr 29 2026

விஜய் தேவையில்லாம என் வழில குறுக்க வந்துட்டாரு.! சீமானின் அதிர்ச்சி கருத்து வைரல்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திரையுலகை விட்டு விலகி அரசியலில் களமிறங்கிய விஜய், தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி முதல் முறையாக இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். 

தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாக உள்ளன. பலரும் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்ததாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனினும் விஜய் மீது அரசியல் மற்றும் சினிமா சார்பிலும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விஜய் குறித்து வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறுகையில், 

"என் சின்ன தம்பி விஜய் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், இந்நேரம் 2026 தேர்தலில் என் மக்கள் அனைவரும் எனக்கு ஓட்டு போட்டிருப்பார்கள். என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் விஜய் தேவையில்லாமல் என் வழியில் குறுக்கே வந்துவிட்டார்." என்று சீமான் தெரிவித்துள்ளார்.


சீமானின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் ரசிகர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மே 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளே இந்த விவாதத்திற்கு இறுதி பதிலை தரும் என பலரும் கருதுகின்றனர்.

Advertisement

Advertisement