• Apr 29 2026

சின்னத்திரையில் வில்லியாக அசத்தும் சல்மா அருணின் ஸ்டைலிஷ் போட்டோஷூட் வைரல்!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் டிஆர்பி அரசியாக திகழும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வரும் நடிகையாக சல்மா அருண் திகழ்ந்து வருகிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்த சல்மா அருணுக்கு, அந்த சீரியல் முடிவடைந்த சரியான நேரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. இது அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

அந்த சீரியலில் ரோகிணியாக நடிக்கும் சல்மா, வில்லியா அல்லது பாவப்பட்டவளா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கதாநாயகன் முத்து மற்றும் மீனாவிற்கு இணையான ரசிகர் பட்டாளத்தை ரோகிணியும் பெற்றிருப்பது சிறப்பான விஷயம்


வில்லி கதாபாத்திரத்திலும் தனது நடிப்பால் விருதுகளை வென்று குவித்த சல்மா அருண், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் வினோதினி சீரியலிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். இரண்டு சேனல்களிலும் ஒரே நேரத்தில் வலம் வரும் சல்மா அருண் சின்னத்திரையின் பிரபலமான முகமாக உயர்ந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை சல்மா அருண் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்...

Advertisement

Advertisement