சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் மனோஜை பார்த்து விஜயா அழுது புலம்புகின்றார். மேலும், இதற்கெல்லாம் காரணம் மீனாவும் முத்துவும் தான். அவர்களால்தான் பைனான்சியர் கோபப்பட்டு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார் என்று கண்டபடி கத்துகிறார்.
அதற்கு பின்பு, மனோஜை வெளியே எடுக்க மூன்று வழிகள் இருக்கின்றன, ஆனால் அவை அனைத்தும் சிக்கலாகத்தான் இருக்கின்றன. இறுதியாக, பைனான்சியர் இதனை வாபஸ் வாங்க வேண்டும். அதனால் மட்டுமே மனோஜ் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியே வரலாம் என வக்கீல் கூறுகிறார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த ரோகினி அழுது புலம்பி, “உனக்காக நான் இருக்கிறேன், உன்னை இப்படியே விடமாட்டேன். அந்த பைனான்சியரிடம் பேசி உன்னை வெளியே எடுக்கிறேன்” என்று மனோஜுக்கு வாக்கு கொடுத்து செல்கிறார்.

இன்னொரு பக்கம், மீனா சிந்தாமணி வீட்டுக்குச் சென்று கேஸை வாபஸ் வாங்கும்படி கூறுகிறார். ஆனால் சிந்தாமணி, “இது எல்லாம் உன்னுடைய வீட்டை சொந்தமாக்கத்தான் செய்தேன்” என்று உண்மையை கூறுகிறார். மேலும், அந்த வீடு உன் மாமனாருக்கு கோவில் போன்றது. அதைப் பறித்தால் அவர் உயிரோடு இருப்பாரா என்று பேச, மீனா அவரை அடிக்க கை ஓங்குகிறார்.
மேலும் மீனா கோபத்தின் உச்சியில், “நான் இப்போது சாதாரண பெண் இல்லை. சங்கத்தின் தலைவி. உனக்கு எதிராக நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் நீ ஜெயிலுக்குத்தான் போக வேண்டும். மரியாதையாக மனோஜின் கேஸை வாபஸ் வாங்கு” என்று சவால் விடுகிறார்.
அதேபோல், பைனான்சியரிடம் சென்று மனோஜின் கேஸை வாபஸ் வாங்கும்படி அழுது புலம்புகிறார் ரோகிணி. ஆனால் அவர் முடியாது என்று கூறுகிறார். ஆனாலும், சிந்தாமணியிடம் இதைச் சொல்ல, அவர் ரோகினியிடம் 10 லட்சம் கேட்குமாறு செக் வைக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!