• Dec 28 2024

Adrenalin Fueled பந்தையத்திற்கு ரெடியான அஜித் குமார்.. இப்பவே சும்மா கலக்குறாரே..!!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் அஜித்குமார் நடிப்பில் மட்டும் திறமையானவராக இல்லாமல் கார் ரேஸ் ஓடுவது பைக் ரைஸில் கலந்து கொள்வது என கலக்கி வருகின்றார். மேலும் துப்பாக்கிச் சுடுதல், புகைப்படம் எடுத்தல், சிறிய ரக விமானங்களை ஓட்டுதல், அடிக்கடி ட்ரிப் செல்லுதல் ஆகியவை அஜித்தின் ஹாபிகளில் ஒன்றாக காணப்படுகின்றது.

அஜித் நடிப்பில் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதேபோல குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் இரண்டாவது ஷெட்யூல் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகின்றது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாம். இந்த படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காணப்படுகின்றார்கள்.


இந்த நிலையில், பல வருடங்களாக கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொள்ளாமல் இருந்த அஜித் குமார் தற்போது மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை நடிகர் ஜான் கொக்கேன் தெரிவித்துள்ளார்.

மேலும், சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், புதிய பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், துபாயில் உள்ள ஆர்டோம் கார் ரேஸ் மைய்யத்தில் ஃபெராரி 488 இ.வி.ஒ சேலஞ் காரை செஸ்ட் செய்துக் கொண்டிருக்கும் அஜித்குமார், நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ரேஸிங் சீசனுக்கு தயாராகி வருகிறார். மேலும் புதிய ஹெல்மட் பெயிண்ட் ஸ்கீமை அறிமுகப்படுத்துவதிலும் மகிழ்ச்சி. அஜித்குமார் Adrenalin Fueled பந்தையத்திற்கு ரெடி எனவும் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 


Advertisement

Advertisement