• Dec 26 2024

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த எமி ஜாக்சனின் நிச்சயதார்த்தம்! லண்டனில் தடபுடல் விருந்து! வைரல் போட்டோஸ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

லண்டனைச் சேர்ந்த ஆங்கில நடிகை தான் எமி ஜாக்சன். இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தங்கமகன், தெறி, எந்திரன் 2.0 ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் 2019 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த தொழிலதிபரான ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிரம்மாண்ட பார்ட்டியின் மூலம் தெரிவித்திருந்தனர்.

பின்னர் இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  காதலனை விட்டு பிரிவதாக தடாலடி பதிவை வெளியிட்டு இருந்தார். அதன் பின்னர் சில மாதங்களிலேயே  நடிகர் எட் வெஸ்ட்விக்கை  காதலித்து வருவதாக கூறினார்.


இந்த நிலையில், எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்த இரவு பிரம்மாண்டமாக இடம்பெற்றுள்ளது.


இதில் இவரது குடும்பத்தினரும் நண்பர்கள் மட்டுமே அதிகமாக கலந்து கொண்டுள்ளனர். இது குறித்தான புகைப்படங்கள. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன்.

குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement