அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் மூன்று வாரங்களில் நிறைவுக்கு வரவுள்ளது. இதில் முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின் ஆகியோர் கடுமையான போட்டியாளர்களாக காணப்படுவதோடு இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின் பண்ணுவார் என்ற நம்பிக்கையும் காணப்படுகிறது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ப்ரீஸ் டாஸ்க் மூலம் அவர்களுடைய குடும்பத்தினரை வீட்டுக்குள் அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் பிக்பாஸ்.
அது மட்டும் இல்லாமல் சௌந்தர்யாவுக்கு நெருங்கிய நண்பரான விஷ்ணு, அருண் பிரசாத்தின் காதலியான அர்ச்சனா, மற்றும் விஜய் டிவி தொகுப்பாளரும் பேச்சாளருமான மகேஷ், பவித்ராவின் உயிர்த்தோழி உட்பட நேற்று பிக்பாஸ் வீடே கலகலப்பாக காணப்பட்டது.
d_i_a
இவ்வாறு இந்த வாரம் கலகலப்பாக சென்ற நிலையில், வார இறுதி நாளான இன்றைய தினம் எலிமினேஷன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகிறது.
அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களை இருப்பதால் டபுள் எவிக்க்ஷன் நடைபெறும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் நடித்து பிரபலமான நடிகை அன்ஷிதா எலிமினேட் ஆகி கண்ணீரோடு வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன.
மேலும் அன்ஷிதாவை தொடர்ந்து இன்னும் ஒரு ஆண் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாகவும் அது ஜெஃப்ரி அல்லது விஷாலாக இருக்க வாய்ப்பு அதிகம் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பான அதிகார்வபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!