சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 14-ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்ந்து உள்ளது. இதனால் பல இயக்குனரும் அவருக்கு கதையை கொடுக்கலாம் என்ற நம்பிக்கையில் காணப்படுகின்றனர்.
சூர்யாவை வைத்து இயக்க இருந்த படம் தான் பராசக்தி. ஆனாலும் சூர்யா வெளியேறிய பிறகு உடனடியாக சிவகார்த்திகேயனை புக் செய்தார் சுதா கொங்கரா. ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மாணவர்களின் போராட்டத்தை பற்றியும் அந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை பற்றியும் அடிப்படையாகக் கொண்டே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கி உள்ளார். அதாவது அந்த இடத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் அவரது கார் முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் நல்ல விதமாக சிவகார்த்திகேயனுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. மற்ற காரை ஓட்டிச் சென்ற பெண் சிவாவின் காரை ஒட்டி வந்த சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, காவல்துறையினர் வந்து சமாதானப்படுத்தி வாகன நெரிசல் ஏற்படாமல் அங்கிருந்து இரண்டு தரப்பினரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
Listen News!