பா. ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கிய திரைப்படம் தான் பாட்டல் ராதா. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான்விஜய், ஆறுமுக வேல், சிரஞ்சீவி, மாதவிராஜ் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஷால் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
பாட்டல் ராதா திரைப்படம் குடிப்பழக்கத்தை மையமாக வைத்து காமெடி ஜானலில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சிறப்பு திரையிடல் சென்னையில் நடைபெற்ற போது பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்துள்ளனர்.
இந்த படத்தில், குடி நோயாளியாக காணப்படும் குரு சோமசுந்தரம் மறு வாழ்வு மையத்தில் படும் வேதனைகள், அனுபவிக்கும் கொடுமைகள், இறுதியில் நலம் பெற்று குடும்பத்துடன் அவர் இணைந்தாரா? இல்லையா? அல்லது குடி நோயாளி ஆகவே வாழ்ந்து தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டாரா? என்பதை உணர்வுபூர்வமாகவும் காதல், காமெடி, எதார்த்தம் என அனைத்து விதத்திலும் எடுத்துச் சொல்லும் படம் தான் பாட்டல் ராதா.
இந்த நிலையில், பாட்டல் ராதா படத்தின் விமர்சனத்தை விரிவாக பார்ப்போம். அதில், குடிகாரன் கேரக்டரில் குரு சோமசுந்தரம் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
படத்தின் நாயகியும் கிளைமாக்ஸ் காட்சியில் பலரை அழ வைத்து உள்ளார். படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. மேலும் பார்ப்போரை சலிப்படைய செய்யாது குடிகார கணவர்கள் செய்யும் சில்மிஷங்கள், அவர்களால் குடும்பம் சந்திக்கும் அவமானங்கள் போன்றவற்றை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லியுள்ளது .
தற்காலத்துக்கு தேவையான நல்ல கலருத்தை கருத்தை கமர்சியலாக பாட்டல் ராதா படத்தின் கதை சொல்லி உள்ளது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் உண்மையான கேரக்டர்களாகவே வாழ்ந்தும் உள்ளார்கள்.
இந்த படத்தை குடிப்பவர்கள், குடிக்க ஆசைப்படுபவர்கள், குடி நோயாளிகள் என அனைத்து குடிமகன்களும் குடும்பத்துடன் பார்க்கலாம் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குடிப்பழக்கம் ஒரு மனிதனையும் அவருடைய குடும்பத்தையும் எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கின்றது என்பதை நகைச்சுவையாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் சொல்லி இருக்கின்றார்கள். மொத்தத்தில் பாட்டல் ராதா திரைப்படம் எதார்த்தத்தின் உண்மையாக பலரிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!