• Apr 24 2026

பராசக்தி ரிலீஸ் தேதியால் எழுந்த சர்ச்சை… SK நன்றி மறந்துவிட்டாரா.? முக்கிய பிரபலம் பகீர்

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடுகள் குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகளும், விவாதங்களும் எழுந்து வருகின்றன. அந்த வரிசையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல்கள் கடந்த சில நாட்களாக ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


முதலில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இதற்கிடையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படம் அதற்கு போட்டியாக ஜனவரி 9 அல்லது 10-ம் தேதியே ரிலீஸ் செய்யப்படலாம் என்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கின.


இந்த நிலையில், நேற்றைய தினம் ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருந்தார். இதன் மூலம், ‘ஜனநாயகன்’ (ஜனவரி 9) – ‘பராசக்தி’ (ஜனவரி 10) என அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்கள் வெளியாகும் சூழல் உருவாக உள்ளதால் மிகுந்த போட்டி ஏற்படவுள்ளதாக ரசிகர்கள் கருதினர். 

இதனால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், திரையுலக வட்டாரங்களிலும் விவாதங்கள் தீவிரமடைந்தன. இந்த விவகாரம் குறித்து திருப்பூர் சுப்ரமணியம், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், சிவகார்த்திகேயன் – விஜய் தொடர்பான விமர்சனங்களுக்கு கடுமையான பதிலை அவர் அளித்துள்ளார்.


திருப்பூர் சுப்ரமணியம், “விஜய்க்கு சிவகார்த்திகேயன் என்ன நன்றி செய்ய வேண்டும்? சிவகார்த்திகேயனுக்கு விஜய் என்ன செய்து கொடுத்தார்? பிறகு அவர் நன்றி மறந்துவிட்டார் என்று ஏன் சொல்ல வேண்டும்? ஊடகவியலாளர்கள் இப்படி கேள்வி கேட்கக் கூடாது.” என்று கூறி, இந்த விவகாரத்தில் சில ஊடகங்கள் தவறான கேள்விகளை எழுப்புவதாக அவர் விமர்சித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஒரு படத்தில் இயக்குநர், துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுக்கும் படி ஒரு காட்சியை வைத்தார். உடனே அதற்காக சிவகார்த்திகேயன் நன்றியை மறந்துவிட்டார் என்று சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும்?” என்று கேள்வியும் எழுப்பினார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement