• Apr 21 2026

அடிச்சு கேட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டேன்.! விஜய் பற்றி சுந்தர். சி

Aathira / 8 hours ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் தலைவர்களும் விஜயின் அரசியல் வருகையை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும் இயக்குநரும், அரசியல்வாதியுமான சுந்தர்.சி  சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் கவனம் ஈர்த்துள்ளது. 

அதன்படி அவர் கூறுகையில், “விஜய் சார் எனக்கு சீனியர்… அவர் ஒரு பெரிய கட்சியின் தலைவர். நான் ஒரு சாதாரண MLA மட்டுமே. அவரைப் பற்றி பேச நான் யார்?” என்று ஆரம்பித்தார்.


மேலும், “என்னை எவ்வளவு கேட்டாலும் விஜய் சார் குறித்து எந்த கருத்தையும் நான் தெரிவிக்க மாட்டேன். ஆனால் மற்ற அரசியல்வாதிகள் பற்றி கேட்டால் நிச்சயம் பேசுவேன்” எனத் தெளிவாக கூறினார்.

அரசியலில் கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் கூட, அவரின் இந்த பதில் மரியாதை மற்றும் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு சுந்தர்.சி அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, “அன்பே சிவம் ஸ்டைல் ரெஸ்பெக்ட் பாலிடிக்ஸ்” என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement