• Dec 25 2024

பிக் பாஸ் வையில் காட் என்ட்ரி! பிக் பாஸ் 7 மாயாவின் உறவினரா!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தற்போது பிக் பாஸ் வீடு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பரபரப்பாக ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள் இந்நிலையில் 2 நபர்கள் வெளியேறி விட்டார்கள். தற்போது வையில் காட் தொடர்பாக சில சலசலப்புகள்  ஏற்பட்டுள்ளது. 


விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 நிகழ்ச்சி பிரமாண்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது. தற்போது பெண்கள் 9 பேர் மற்றும் ஆண்கள் 7 பேருடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் கண்டிப்பாக வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களே வைல்டு கார்டு என்ட்ரி குறித்து பேச துவங்கிவிட்டனர். 5 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என கூறப்படும் நிலையில், அதில் ஒருவராக ஸ்வாகதா என்பவர் வரலாம் என கூறப்படுகிறது.


இவர் பிக் பாஸ் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை மாயா அவருடைய அக்கா தான் இந்த ஸ்வாகதா. இவர் பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு என்ட்ரியில் வருவார் என சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 

Advertisement

Advertisement