• Apr 23 2026

குழந்தைகள் குறித்து தவறான கருத்து – சைபர் கிரைமில் புகார் அளித்த கன்னிகா

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சினேகன் – கன்னிகா தம்பதியருக்கு கடந்த ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் அழகான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது வழக்கம்.

இந்த நிலையில், நடிகை கன்னிகா சினேகன் தனது ஒரு வயது பெண் குழந்தைகளை குறித்து சமூக வலைதளத்தில் தவறான கருத்து பதிவிட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது, கன்னிகா வெளியிட்ட இந்த அதிரடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “என்னுடைய இன்ஸ்டாகிராம் மெசேஜில் விக்னேஷ்ராஜ் எஸ்ஜே என்ற நபர், என் குழந்தைகளை பற்றி தரக்குறைவான மெசேஜ் அனுப்பியிருந்தார். உடனடியாக அவர்மீது சைபர் கிரைமில் புகார் அளித்தேன். அதேபோல் அவரது இன்ஸ்டாகிராம் ஐடியையும் ரிப்போர்ட் செய்தேன். தற்போது அந்த கணக்கு பிளாக் செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர முடியும் என்றும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படி இது கடுமையான குற்றமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இப்படிப்பட்ட குற்றங்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

குழந்தைகள் குறித்து தரக்குறைவான கருத்து வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் கன்னிகா  சினேகன் எடுத்துள்ள சட்ட நடவடிக்கை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து பேசும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அனைவரும் சமூக பொறுப்பை உணர வேண்டும் என்றும் அவர் தனது வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement