• Jun 12 2026

மனுஷனா நீ? பதவியைக் கொடுத்த பாவம் யாருக்கு.? கண்ணீருடன் கதறும் பாக்கியா..!

shali / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கவுன்சிலர் பாக்கியாவப் பாத்து செழியன் கடைசி வரை வெளியிலேயே வரக்கூடாது என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா நீங்க பேசுறது ரொம்ப தப்பு அவனோட வாழ்க்கையே போயிடும் என்கிறார். அதுக்கு கவுன்சிலர் அதைப்பற்றி எனக்கென்ன கவலை என்று கேக்கிறார். 


மேலும் நீங்க முதலமைச்சரப் போய்ப் பாத்தாலும் அவனை வெளியில கொண்டுவர முடியாது என்கிறார். இதனை அடுத்து, செல்வி பாக்கியாவப் பாத்து இந்த ஆள் எல்லாம் மனுஷனே இல்ல குரங்கு கையில பூமாலை கிடைச்ச மாதிரி இந்த ஆளுட்ட போய் பதவியக் கொடுத்திருக்காங்க என்று சொல்லுறார். பின் பாக்கியா செல்வியிடம் ஏதாவது பண்ணி செழியனை வெளியில கொண்டுவரனும் என்கிறார்.

அதனை அடுத்து ஜெனியோட அப்பா செழியனை எப்புடியாவது நான் வெளியில கொண்டுவாறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஜெனி இத தானே அப்பா நேற்றும் சொன்னீங்க ஒரு நாள் முழுக்க செழியன் ஸ்டேஷனில இருந்திட்டான் என்கிறார். 


பின் பாக்கியா ஜெனி வீட்டுக்கு வந்து நடந்த எந்த விஷயத்துக்கும் நான் காரணம் இல்ல என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஜெனி பாக்கியாவப் பாத்து நீங்க இப்ப எல்லாம் முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறிட்டீங்க என்கிறார். மேலும் வீட்டில இருக்கிறவங்க நல்லதுக்கு ஏதாவது சொன்னால் கூட நீங்க கேக்கிறேல நீங்க நினைச்சத தான் செய்யுறீங்க என்கிறார் ஜெனி.

அதனை அடுத்து பாக்கியா ஜெனியைப் பாத்து நான் எப்புடியாவது செழியனை வெளியில கூட்டிக்கொண்டு வந்திருவேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். பின் பாக்கியா செழியனை காப்பாத்துறதுக்காக ஒருவரிடம் உதவிக்குப் போய் நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement