• Dec 25 2024

பாண்டியம்மாவுக்கு விஷ ஊசி போட்டு மரண பயத்தைக் காட்டிய பரணி! அண்ணா சீரியலில் புது ட்விஸ்ட்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் அண்ணா. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

அதில் சௌந்தரபரணி, சும்மாவே உன் பொண்டாட்டி உன்னை மதிக்க மாட்டா. இப்ப அவ அண்ணன் கூட வேற சேர்ந்துட்டா. அவகிட்ட கொஞ்சம் உஷாரா இருக்க பாரு என சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து யாரும் இல்லாத நேரத்தில் பாண்டியம்மா பசியில் தவிக்க, பாக்கியமும் இசக்கியும் அவரது கைகளை  பிடித்துக் கொள்கிறார்கள். இதன் போது பரணி ஒரு ஊசியை எடுத்து அவருக்கு போட்டு, உனக்கு போட்டது விஷ ஊசி இன்னும் ஒரு மணி நேரத்துல இதுக்கு மாத்து ஊசி போடணும். இல்லனா உன் கை, கால்கள் இழுத்து ரத்தம் சுண்டி செத்துப் போயிடுவ என்று பயம் காட்ட பாண்டியம்மா பதறுகிறார்.


ஆனால் ஏன் இந்த ஊசியை போட்ட,  எனக்கு மாத்து ஊசிய போடு என்று பாண்டியம்மா கெஞ்சவும், உனக்கு பத்து நிமிஷம் தாறேன் அதுக்குள்ள உன் துணிமணி எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு இந்த வீட்ட விட்டு போய்விடு. அப்பதான் உனக்கு மாத்து ஊசி போடுவேன் என்று பரணி மிரட்டுகிறார்.

பாண்டியம்மா முடியாது என்று சொல்லி சௌந்தரபாண்டியை கூப்பிட, பரணி இன்னும் பயம் காட்டுகிறார். இதனால் மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிக்கொண்டு பாண்டியம்மா ஊருக்கு போக கிளம்ப, ஆட்டோவும் ரெடியா வருகிறது.

இப்பயாவது ஊசிய போடுடி என கேட்க, நீ ஊருக்கு போற வரைக்கும் போட முடியாது என்று சொல்கிறார். மேலும் அதுக்கு முதல் நீ ஒரு வேலை செய்யணும் என்று, 'சௌந்தரம் நான் ஊருக்கு கிளம்பிட்டேன். இனிமே உன் வீட்டு பக்கம் வர மாட்டேன்' என்று சொல்ல வைத்து வீடியோ எடுத்துக் கொள்கிறார் பரணி.

இவ்வாறு பாண்டியம்மாவை ஊருக்கு அனுப்பி வைத்த பிறகு, வீட்டிற்கு வந்தவர்கள் எல்லாரும் சந்தோஷமாக காணப்படுகிறார்கள். இனி இந்த சீரியல் எவ்வாறு நகரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement