• Dec 26 2024

பேசு.. ஏன் அமைதியா இருக்கா? ஏதாச்சும் பேசு..! டார்கெட் வச்சு ரஜினியை செய்யும் பிரபல விமர்சகர்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவரும் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதன் காரணத்தினால் தற்போது படக்குழுவினர் பட ப்ரோமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

வேட்டையன் படம் தொடர்பில் சென்னை விமான நிலையத்தில் இன்றைய தினம் பேட்டி கொடுத்த ரஜினிகாந்த், இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் ஆந்திராவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய லட்டு விவகாரம் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவர் அந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து நோ கமெண்ட்ஸ் என கூறிவிட்டு சென்றுள்ளார்.


ஏற்கனவே மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷன் நடந்த போது நடிகர் கார்த்தியிடம் லட்டு விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது அவர் அளித்த பதிலுக்கு ஆந்திரா முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். இதனால் நடிகர் கார்த்தி மன்னிப்பும் கேட்டார்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி மற்றும் ரஜினிகாந்தின் இந்த பேட்டிகள் தொடர்பில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தல பதிவில் வம்பு இழுத்து வருகின்றார்.

அதன்படி நடிகர் கார்த்தியையும் பவன் கல்யாணயும் வைத்து வடிவேல் பார்த்திபன் காமெடி  மூலம் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் லட்டு விஷயத்தில் நோ கமெண்ட்ஸ் என்று கூறியது நிலையில், இது தொடர்பில் அவர் பல விமர்சனங்களை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement