தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தான் கருப்பு. இது சூர்யா நடித்துள்ள 45வது திரைப்படம் ஆகும். இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள நிலையில், இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா வக்கீலாக நடித்திருக்கிறார். அவருடன் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற டுஎல்.ஐ.கே படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.ஜே. பாலாஜி, கருப்பு படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Listen News!