• Dec 26 2024

விஜயா தலையில் இறங்கிய இடி.. மீனாவுக்கு முத்து செய்த காரியம்? பல்பு வாங்கிய ரோகிணி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா விஜயாவுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்கும்போது அதை பரிமாறி விட்டுச் செல்லுமாறு சொல்ல, மீனாவும் விஜயாவுக்கும் பார்வதிக்கும் பிரியாணியை பரிமாறி விட்டுச் செல்கின்றார். போகும்போது ரதியும் அவருடைய காதலனும் மாறி மாறி சாப்பாடு ஊட்டி விடுவதை பார்த்து சந்தேகப்படுகின்றார்.

இன்னொரு பக்கம் வீதியில் போகும் வாகனங்களை டிராபிக் செக் பண்ணிக் கொண்டிருக்க அந்த வழியால் சென்ற சத்யாவின் பைக்கை நிப்பாட்டுகின்றார்கள். அதே நேரத்தில் முத்துவின் காரையும் நிப்பாட்டி செக் பண்ணுகின்றார்கள். அப்போது சத்யாவின் பைக்கில் பியர் பாட்டில்கள் காணப்படுகின்றது.

ஆனாலும் தன்னிடம் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சரியாக இருப்பதாக காட்டுகின்றார் சத்யா. முத்துவும் அருகில் நின்று சத்யாவுக்கு அட்வைஸ் கொடுப்பது போல போலிஸ்காரருடன் கதைத்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் இப்போது ஒன்றும் புரியாது நாளைக்கு நடுத்தெருவில் நிற்கும் போது தான் தெரியும் என சத்யாவுக்கு சொல்லிச் செல்கின்றார்.


இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த விஜயா பிரியாணி சாப்பிட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டிருக்க ரோகினி அவருக்கு சுடுதண்ணி வைத்துக் கொள்கின்றார். அதன் பிறகு அண்ணாமலை ஏன் மீனா கீரை, பொரியல் என்று விதவிதமா சமைத்துக் கொண்டு வந்தாளே, நீ அதை சாப்பிடாம ஏன் பிரியாணி சாப்பிட்டா? என பேச, அவதான் எனக்கு பிரியாணி வாங்கி வந்தா என விஜயா சொல்கின்றார்.

இதனால் ரோகிணி இதுதான் சான்ஸ் என கொண்டு போன சாப்பாட்டை என்ன செய்தீர்கள் என கேட்க, மீனா தயங்கி தயங்கி நடந்ததை சொல்லுகிறார். இதை கேட்டு அண்ணாமலை பாராட்ட முத்துவும் பாராட்டுகின்றார். ஆனால் விஜயா யார் விட்டு சாப்பாட்டை யாருக்கு கொடுப்பது என பேசுகின்றார். அதன் பின்பு முத்து மீனாவுக்கு சுத்தி போடுகின்றார். 

இறுதியாக மனோஜ் தூங்கும்போது லெட்டரை நினைத்து தூங்காமல் தவிக்க மொட்டை மாடிக்கு சென்று விஜயாவை போன் பண்ணி அழைக்கின்றார். விஜயாவும் அங்கு சென்றதும் லெட்டரை கொடுக்க அவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement