தமிழ் திரையுலகில் பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில், நடிகை வனிதா விஜயகுமார் தனது நேரடி கருத்துக்களால் பேசப்படும் நட்சத்திரமாகி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர், தமிழ் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை கவனம் செலுத்தி உரையாற்றினார்.
வனிதா விழாவில் பேசும்போது, "நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என்றதுடன் திரை உலகம் எனக்கு ஒரு குடும்பம் போல எனத் தெரிவித்திருந்தார். மேலும் தமிழ் சினிமா வளர வேண்டுமென்றால் அதற்கு மொழிஅல்ல திறமையை தான் முக்கியமாகக் கொள்ள வேண்டும் என்று உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
திரையுலகில் பெரும் வெற்றி பெற்ற பல ஊமை படங்கள் இருக்கின்றன. குறிப்பாக, சார்லி சாப்ளின் என்ற படத்தில் இயக்குநர் வார்த்தைகள் இல்லாமலே கதையை புரிய வைப்பார். அதேபோல், தமிழ் சினிமாவிலும் பல படங்களை அர்ப்பணிப்புடன் செய்யலாம்" என்று தெரிவித்தார்.
வனிதா மேலும், "தமிழ்நாட்டில் நிறைய திறமையான பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது. தமிழ் ஹீரோயின்கள் மட்டுமே நடிக்கக்கூடிய பல படங்கள் வெளிவர வேண்டும். தமிழ் நடிகைகளுக்கு அதிக கவனம் வழங்கப்பட வேண்டும்."என்று வலியுறுத்தினார்.
தமிழ் சினிமாவில் வெளிநாட்டு நடிகைகள் மற்றும் பிற மொழி நடிகைகள் அதிகம் அறிமுகமாகும் நிலையில், தமிழ் நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்பது அவரது முக்கிய கோரிக்கையாக இருந்தது.
Listen News!