விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 60 நாட்களைக் கடந்து இறுதி நாட்களை எட்டி வருகின்றது. இதில் 17 போட்டியாளர்கள் தமது ஆட்டத்தை தொடர்ந்து வருகின்றார்கள்.
இந்த வாரம் இடம்பெற்ற நாமினேஷன் லிஸ்டில் ஜாக்குலின், சௌந்தர்யா, மஞ்சரி, சாச்சனா, முத்துக்குமரன், ஆனந்தி உட்பட மொத்தம் 12 பேர் இடம் பெற்று இருந்தார்கள். ஆனாலும் இதில் ஜாக்குலினும் சௌந்தர்யாவும் முதலாவதாக சேவ் பண்ணப்பட்டார்கள்.
எஞ்சியுள்ள பத்து போட்டியாளர்களில் யார் வெளியேறப் போறார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் திடீர் என டுவிஸ்ட் ஒன்றை வைத்தார் விஜய் சேதுபதி. அதாவது இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற இருப்பதாக அறிவித்தார். இது போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய மரண பீதியை ஏற்படுத்தியிருந்தது.
d_i_a
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுள் சச்சனாவும் ஆனந்தியும் எலிமினேஷன் செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு வாரமும் சச்சனா காப்பாற்றப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆனார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் 60 நாட்கள் தாக்குப் பிடித்த சச்சனாவின் மொத்த சம்பள விபரம் வெளியாகி உள்ளது. அதிலும் இவருக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு நாளைக்கு அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 60 நாட்கள் இருந்ததற்காக அவருக்கு 12 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்களுள் அதிக சம்பளம் வாங்கியது சச்சனா தான் எனக் கூறப்படுகிறது.
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக சச்சனா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் சிவகார்த்திகேயனின் 23 வது படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
Listen News!