• Apr 23 2026

விஜய்–திரிஷா விவகாரம்: நடிகர் விமல் தெரிவித்த கருத்து வைரல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான விவகாரம் பெரும் பேசுபொருளாகி உள்ளது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக விஜயுடன் வாழ்ந்து வந்த அவரது மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் சினிமா துறையிலேயே அல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், விஜய்–திரிஷா விவகாரம் குறித்து நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அந்த காரை இப்போது யார் வைத்திருக்கிறார்கள், யார் ஓட்டுகிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. நான் திரைத்துறையில் இருப்பதால் அந்த விஷயங்கள் குறித்து எனக்கு தகவல் இல்லை.

மேலும், விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ, அதேபோலத்தான் நானும் பார்க்கிறேன் என்றும் நடிகர் விமல் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement