• Jan 14 2025

மனோஜை வெளுத்து வாங்கிய விஜயா.. முத்து போட்டுக் காட்டிய குறும்படம்! அதிர்ச்சியில் ரோகிணி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், முத்துவும் செல்வமும் கடை ஒன்றில் பிரிட்ஜ் வாங்கிக் கொண்டு இருக்க, அங்கு போலீசார் வருகின்றார்கள். மனோஜை ஏமாற்றிய ஃபிராடு நபர்களை கைது செய்தபோலீசார், அங்கிருந்த முத்து, செல்வத்தையும் அள்ளிக் கொண்டு செல்கிறார்கள்.

அதன் பின்பு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த முத்துவும் செல்வமும் நாங்க எந்த தப்பும் செய்யவில்லை, தம்மை விடுமாறு சொல்லவும், நாங்க விசாரிச்சு அதுக்கப்புறம் உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்றால் விடுவோம் என அவர்களை ஜெயிலில் அடைக்கின்றார்கள்.

இதைத்தொடர்ந்து மனோஜ்க்கு ஃபோன் பண்ணிபோலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்கின்றார்கள். அங்கு வந்த மனோஜ் அதில் என்னுடைய சாமான்கள் எதுவும் இல்லை என சொல்லுகிறார். இதனை ஜெயிலுக்குள் இருந்த முத்து அப்படியே வீடியோ எடுக்கிறார்.


இதன் போது மனோஜ் 4 இலட்சம் பொருட்கள் கொடுத்து ஏமாந்ததையும் ஒரு லட்சம் வீட்டிற்கு லாபம் காட்டியதையும்  ஒப்புக்கொண்டு போலீசாரிடம் சொல்லுகிறார். இதை அப்படியே உள்ளே இருந்து முத்து வீடியோ எடுக்கிறார். அதன் பின் மனோஜ் கிளம்ப, முத்துவும் செல்வமும் நிரபராதிகள் என்று போலீசார் அவர்களை வெளியே விடுகின்றார்கள் .

இதை அடுத்து வீட்டுக்கு வந்த முத்து எல்லாரையும் அழைத்து குறும்படம் போட்டு காட்டுவதாக மனோஜ் செய்தவற்றை டிவியில் போட்டு காட்டுகின்றார். இதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றார்கள்.

அந்த நேரத்தில் உனக்கு எப்படி நாலு லட்சம் காசு வந்தது என முத்து விசாரிக்க, மனோஜ் உண்மையை சொல்லி விடுவான் என்ற பதற்றத்தில் விஜயா அவரை போட்டு அடிக்கின்றார். மேலும் நீ யார்கிட்ட கடன் வாங்கினாய் என கேட்டு கேட்டு அடிக்கின்றார்.

இதனால் புரிந்து கொண்ட மனோஜ் தான் தனது பார்க் நண்பரிடம்   கடன் வாங்கியதாக சொல்லி கதையை மாற்றுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement