• Apr 24 2026

அலட்சியம் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுப்போம்.! SK, கமலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் இறுதியாக பராசக்தி திரைப்படம் வெளியானது. இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலித்து வெற்றி பெற்றது. 

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு 'சேயோன்' என பெயரிடப்பட்டு சமீபத்தில்  படத்தின் ப்ரோமோ ஒன்றும் வெளியாகி  ரசிகர்களுக்கு இன்ப  அதிர்ச்சியை கொடுத்திருந்தது.   இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 

இந்நிலையில், 'சேயோன்' என்ற தலைப்புக்கு எதிராக டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது. 


அதன்படி 2022ஆம் ஆண்டு வெளியான மாயோன் திரைப்படத்தை தயாரித்த தாங்கள், அதன் இரண்டாம் பாகத்தை 'சேயோன்' என்ற பெயரில் உருவாக்க திட்டமிட்டிருந்ததாக அந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தெரிவித்துள்ளார். ஒரே பெயர் பயன்படுத்தப்படுவதால் குழப்பம் ஏற்படும் என்பதால், தலைப்பை மாற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய அருண்மொழி மாணிக்கம், 'இந்த புகார் கமல்ஹாசன் அல்லது சிவகார்த்திகேயனுக்கு எதிரானது அல்ல. முதலில் தலைப்பு தொடர்பாக புகார் அளித்தபோது அது அலட்சியமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்' என தெரிவித்துள்ளார்.

இந்த தலைப்பு விவகாரம் தற்போது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement