தென்னிந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கும் குடும்பத்தினரின் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் வரும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி, தற்போது அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இருவரின் திருமணம் குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ராஷ்மிகா, ரசிகர்கள் தங்களுக்கு “VIROSH” என பெயர் வைத்த அன்பை நினைவுகூர்ந்து, தங்களின் இணைவை “VIROSH திருமணம்” என குறிப்பிட்டுள்ளார்.. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், திருமணத்திற்குப் பின்னர் ஹைதராபாத்தில் பிரமாண்ட ரிசப்ஷன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஜோடியின் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து, ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
Listen News!