• Dec 25 2024

பிக் பாஸ் வீட்டில் மனைவி ரட்சிதாவுக்காக தினேஷ் செய்த காரியம்! பப்ளிசிட்டியான சுவாரஸ்ய சம்பவம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பல கோடி மக்கள் பார்வையிடும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது  முடிவுக்கு வரவுள்ளது. யார் அந்த வெற்றி கிண்ணத்துக்கு  சொந்தக்காரர் , சொந்தக்காரி என்கின்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது . 

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதி போட்டி தருணத்தில் வீட்டை விட்டு போனவர்கள் எல்லோரும் வருகை தந்துள்ளார்கள் . ரவீனா வருகை தந்தும் பிரதீப் விஷயம் கதைத்ததால் உடனடியாக வெளியேற்றப்பட்டார் . 


இந்த  நிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு பிரபல பாடகி ஒருவரை வரவழைத்து இசைக்குழு நடைப்பெற்றது . அந்த சமயத்தில் தினேஷ் தனது மனைவியான ரக்சிதாவுக்கு ஒரு பாடலை  பாடகியிடம் பாடும் வகையில் கொடுத்துள்ளார் . 


அது என்ன பாடல் என்று பார்த்தால் "கண்ணே கலை மானே " என்ற அந்த பாடல் பாடும் போது கண் கலங்கிய நிலையில் தினேஷ் பீல் பண்ணியுள்ளார் . 


அதனை தொடர்ந்து இன்று மாலை யார் வின்னர் என்றும் தெரிய வர போகின்றது . அதனாலேயே போட்டியாளர்களும் பதற்ற நிலையில் இருப்பது அவரவர் முகத்திலேயே தெரிகிறது . யார் வின்னர் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் .


Advertisement

Advertisement