• Apr 24 2026

நுரையீரல் பாதிப்பால் திடீரென உயிரிழந்த இளம் நடிகை.!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ராஷ்மி லீலா, பப்பா பண்டு, தெலுங்கு ஜானகி, கவலுதாரி, காவ்யாஞ்சலி,  பந்தவ்யா, ககனா குசுமா உள்ளிட்ட பல வெற்றித் தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். 

இவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகிறது.

கன்னட சின்னத்திரையில் 'ராணி' என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட ராஷ்மி லீலா, 2019ஆம் ஆண்டு முதல் நுரையீரல் தொடர்பான பல்மோனரி பைப்ரோசிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். 


இந்த நிலையில், நடிகை ராஷ்மி லீலா மருத்துவர்களின் தீவிர முயற்சிகளையும் மீறி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 38 ஆகும்.

ராஷ்மி லீலாவின் மறைவு கன்னட திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அவருடைய மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement