பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் – ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா விவகாரம் சமூக ஊடகங்களில் சமீப காலமாகவே பேசுபொருளாக இருந்து வருகிறது. இவர்களின் திருமணம், கர்ப்பம், டிஎன்ஏ பரிசோதனை, சட்ட ரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்ந்து சர்ச்சையாகவே காணப்படுகின்றன.
அதாவது, பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து திருமணம் செய்து குழந்தை ஒன்றுக்கு தாயான பிறகு தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா போலீசில் புகார் அளித்தார். இவர்களுக்கிடையிலான வழக்கு தற்போது நீதிமன்றம் வரை இழுபறியில் உள்ளது.
ஆனாலும், ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டித் தான் திருமணம் செய்ததாக கூறிய , அந்த குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்து, அதில் தான் தந்தை என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பொறுப்பேற்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவி ஸ்ருதி, அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். தனது கணவரை விட்டுக்கொடுக்காமல் செயல்பட்டு வருகிறார்.
இதன் காரணமாக, ஜாய் கிரிசில்டா தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து சமூக வலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக பல பதிவுகளை பகிர்ந்து வந்தார். மேலும், தனது ஆண் குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என பெயர் சூட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “மனிதன் ஆட்டம் போடும் போது தெய்வம் அமைதி காக்கும். மனிதன் ஆட்டம் முடியும் போது, அந்த மனிதனுக்கு தெய்வம் ஆட்டம் காட்டும். அவன் செய்த தவறை உணரும் வரை” என்று பதிவிட்டுள்ளார்
Listen News!