அஜித் நடிக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அஜித் சென்னையில் இருந்து அஜர்பைஜான் சென்றார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் அஜர்பைஜான் சென்றவுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் விறுவிறுப்பாக படப்பிடிப்பை முடித்து கொடுக்க ஒத்துழைப்பு கொடுப்பார் என்றும் எதிர்பார்த்தால் அங்கும் சென்று அவர் கார் ரேஸில் ஈடுபட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அஜர்பைஜானில் படப்பிடிப்புக்கு செல்லாமல் படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கார் ரேஸில் கலந்து கொண்டு இருக்கிறாரா? என்று இது குறித்த வீடியோவுக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. அஜர்பைஜான் சாலைகளில் அஜித் வேகமாக கார் ஓட்டும் காட்சிகள் இந்த வீடியோவில் இருப்பதை அடுத்து ஒரு பக்கம் இந்த வீடியோவுக்கு விமர்சனம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த வீடியோவுக்கு அஜித் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு போக மீதமுள்ள ஓய்வு நேரத்தில் தான் அஜித் கார் ரேஸில் ஈடுபடுகிறார் என்றும் படபிடிப்புக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்றும் படக்குழுவினர்கள் தரப்பிலிருந்து இந்த வீடியோவுக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
#Ajithkumar Back in Racing🔥 pic.twitter.com/ceiTHjQucH
Listen News!