• Apr 23 2026

பிக்பாஸ் வீடு புனிதமானது..அதை நான் வணங்குகிறேன்! பூர்ணிமாவுக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இது தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கில் அவர்கள் தோற்றால் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி உள்ளே வருவார்கள் என கூறப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் போட்டியாளர்களுள் ஒருவரான பூர்ணிமா ரவி, தொகுப்பாளரும், நடிகருமான கமலஹாசனையே குடிகார அங்கிள் என கூறி பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தார். 

அதுமட்டுமின்றி, மாயாவும் பூர்ணிமாவும் பிக் பாஸ் வீட்டில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.


அதன்படி, பிக் பாஸ் 7 நிகழ்ச்சி எனக்கு இப்போ போர் அடிக்குது என கூறிய பூர்ணிமா, தனது செருப்பை எடுத்து பிக் பாஸ் சுவருக்கு மேல் தூக்கி எரிந்து விளையாடியுள்ளார். பிக் பாஸ் வீட்டிலுள்ள ஏனைய போட்டியாளர்கள் சிலர் கூறியும், அவற்றை கேட்காமல் செருப்பை தூக்கி மீண்டும் வீசி விளையாடியுள்ளார்.

இந்த நிலையில்,  இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 


'எங்கள் அன்பான பிக்பாஸ் செட் மீது செருப்பு வீசுவது பூர்ணிமாவால் மட்டுமே செய்யக்கூடிய மிகவும் அவமரியாதையான செயல்.. அந்த வீடு புனிதமானது. நான் உட்பட பலருக்கு இது ஒரு மதிப்புமிக்க அடையாளத்தை அளித்துள்ளது. நான் அந்த வீட்டை வணங்குகிறேன்.. அதனுடன் எனக்கு இருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பு நிரந்தரமானது. பூர்ணிமா இவ்வாறு செய்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் வருத்தம், மன்னிக்க முடியாதது.. அவர் ஒரு நச்சுப் போட்டியாளர்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement