• Dec 27 2024

தனுஷின் அக்கா வீட்டிலும் கணவன் - மனைவி சண்டை.. அடுத்தது என்ன நடக்கும்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட நிலையில் இருவருக்கும் விரைவில் விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷின் அக்கா தனது திருமண நாளை கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்து நானும் என் கணவரும் சண்டை போட்டுக் கொள்ளாத நாளே இல்லை என்று பதிவு செய்துள்ளார்.

நடிகர் தனுஷின் சகோதரியும் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகளும் ஆன கார்த்திகா என்பவர் மகப்பேறு மருத்துவராக உள்ளார் என்பதும் அவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது  19 வது திருமண நாள் குறித்த பதிவு செய்துள்ளார். அதில் இந்த 19 ஆண்டுகளில் நமக்குள் ஒரு நாள் கூட சண்டை இல்லாமல் இருந்தது இல்லை, ஆனால் நாம் சண்டை போட்டாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கிறோம்’ என்று கூறி தங்களுக்கு தாங்களே அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து அவருக்கு ராதிகா சரத்குமார், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் கார்த்திகா தனது கணவர் முத்தமளித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக் குவிந்து வருகிறது.

நடிகர் தனுஷ் தனது மனைவியை விட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தாலும் அவரது சகோதரி கார்த்திகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement