• Dec 28 2024

ஒரு கர்ப்பிணி பெண் செய்ற வேலையா இது? பார்க்கவே விபரீதமாக இருக்கே..!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் தீபிகா படுகோன். இவர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக உள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் தமக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும் இந்த ஜோடி சமீபத்தில் சந்தோஷமாக தெரிவித்து இருந்தது. சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் தீபிகா படுகோன் நடித்து இருந்தார். 

இந்த நிலையில், தற்போது மகப்பேறுக்கு முந்தைய யோகா பயிற்சியை தொடங்கிய தீபிகா படுகோன் இது தொடர்பில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தீபிகா படுகோன் ஒரு தரையில் படுத்து இருப்பது போலவும் அவரின் கால்கள் சுவரின் மேல் வைத்திருப்பதையும் பார்க்க முடிகின்றது.


இதில் விபரீத கரணி ஆசனம் என்ற யோகாசானத்தை தான் தீபிகா படுகொன் செய்துள்ளதாகவும், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் தசைகள் மூட்டுக்கள் மற்றும் வீங்கிய கணக்கால் பாதங்களின் வலியை போக்க உதவுகிறது. அது முதுகில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கவும் எடை மற்றும் சோர்வு உணர்வுகளை போக்கவும் உதவுகின்றது.

மேலும் அவருடைய பதிவில், நான் ஒரு நல்ல உடற்பயிற்சியை விரும்புகின்றேன், தினமும்  உடற்பயிற்சி செய்கின்றேன் உடற்பயிற்சி என்பது என் வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். நான் இந்த எளிய 5 நிமிட வழக்கத்தை தினமும் செய்கிறேன். உடற்பயிற்சி செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தீபிகா படுகோன் செய்த இந்த யோகா கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானதாகவும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் நிறைய நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement