• Apr 24 2026

அர்ச்சனாவுக்கு கைபொம்மையான பூர்ணிமா! மாயாவின் ஆட்டம் மாறுமா? சூடுபிடிக்கும் பிக் பாஸ் இல்லம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது செம சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொரு நாளும் பார்ப்பதற்கு சுவாரஷ்யமான பல போட்டிகள் வைக்கப்படுவதனால் போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். 

அதன்படி, பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களின் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்பதே அறிய முடியாமல் மக்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

இதற்கு காரணம், நேற்று நல்லவர்களாக தெரிந்தவர்கள் இன்று கெட்டவர்களாக மாறுகின்றனர். அதேபோல் இன்று கெட்டவர்களாக இருப்பவர்கள் நாளை நல்லவர்களாக மாறிவிடுகின்றனர். இதனாலேயே இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதை கணிக்க முடியாமல் பார்வையாளர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.


மேலும், வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே வந்த அர்ச்சனா ஆரம்பத்தில் அழுது வெளியே போக போறேன் என புலம்பிக் கொண்டு இருந்தார். ஆனால் இப்போது மொத்த போட்டியாளர்களையும் ஆட்டிப் படைக்கும் ஆவேச பெண்ணாக உருமாறி விட்டார்.

அதுமட்டுமின்றி, ஆரம்பத்தில் மாயா கேங் செய்த அட்டூழியங்களை முற்றாக அழித்தொழித்து விட்டார் எனலாம்.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா இருவரும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போல் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை பிரிக்கத்தான் இப்போது அர்ச்சனா கேம் ஆடிக் கொண்டிருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது.

அதன்படி இந்த வாரம் நடந்த டான்ஸ் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற அர்ச்சனா தன்னுடைய பாயிண்டுகளை பூர்ணிமாவுக்கு கொடுத்தார். இந்த டாஸ்கில் மாயாவும் பூர்ணிமாவும் சண்டை வேறு போட்டுக் கொண்டனர்.  

இதைத்தான் அர்ச்சனாவும் எதிர்பார்த்தார். அந்த வகையில் தற்போது பூர்ணிமாவுடன் நெருங்கி இருக்கும் அர்ச்சனா அவருடைய நல்ல குணங்களை பற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறார். 

இதை வைத்து அடுத்த வாரம் புது ஆட்டத்தை தொடங்கும் அவர், மாயா கேங்கை இரண்டாக உடைத்து நிகழ்ச்சியின் போக்கை சுவாரஸ்யப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement